ஆசியப் போட்டி: இலங்கையை 20-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற இந்திய ஹாக்கி அணி 20-0 என்ற கோல் கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 15 புள்ளிகளுடன் முன்னணியில் இருக்கும் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

hockey

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகர்த்தா மற்றும் பாம்பெம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. பேட்மிட்டன், டென்னிஸ், கபடி, தடகளம், மல்யுத்தம், துப்பாகி சுடுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், ஹாக்கி, உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டிகள் ஏ மற்றும் பி பிரிவாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இரு பிரிவிலும் தலா 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 10 நாளான இன்று கடைசி லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீரர்கள் 20-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கையை வீழ்த்தி வெற்றிப்பெற்றனர். இதன் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. நடந்து முடிந்த 5 போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற இந்திய அணி 15 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. இதே போல் மற்றுமொரு அணியில் தென் கொரியாவும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

பி பிரிவில் பாக்கிஸ்தான் மற்றும் மலேசியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. வரும் 30ம் தேதி இந்திய அணி வீரர்கள் மலேசியா அணி வீரர்களை எதிர்த்து விளையாட உள்ளனர்.