வாஷிங்டன்.

சிய பசிபிக் நாடுகளுடனான  வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் மூலம் மற்ற நாடுகள்தான் அதிகம் பயனடைகின்றன என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசு கட்சி வெற்றிபெற்று டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றார்.

பதவி ஏற்றதும் முதல் நடவடிக்கையாக ஒபாமா காப்பீடு திட்டத்தை ரத்து செய்தார்.

அதைத் தொடர்ந்து பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 12 நாடுகளோடு அமெரிக்கா செய்து கொண்டுள்ள டிரான்ஸ் பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் கோப்பில் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம்  முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில்  ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆசிய பசிக் ஒப்பந்தத்த உடன்படிக்கையில்,  ஜப்பான், மலேசியா, வியட்னாம், சிங்கப்பூர், சிலி, புருனே, நியூசிலாந்து, கனடா, மெக்ஸிக்கோ, பெரு உள்ளிட்ட 12 நாடுகள்  உள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம்  மற்ற நாடுகள்தான் அதிகம் பயன்பெறுகிறது என்று டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போதே குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.