ஆசியாட் 2018 : மகளிர் ஹாக்கியில் இறுதிச்சுற்றில் இந்தியா

ஜாகர்த்தா

சிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் ஹாக்கியில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

ஜாகர்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஹாக்கி பிரிவின் அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய மகளிர் அணியும் சீன மகளிர் அணியும் மோதின.   இந்த போட்டியில் இரு அணிகளுமே திறமையாக விளையாடிய போதிலும் கோல் ஏதும் அடிக்காமல் இருந்தன.

ஆட்டம் தொடங்கிய 52 ஆம் நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜித் கவுர் ஒரு கோலை அடித்தார்.  அதை சமன் செய்ய சீன வீராங்கனைகள் முயன்றும் முடியவில்லை.   அதை ஒட்டி இந்திய அணி 1-0 என்னும் கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

வரும் 31 ஆம் தேதி நடக்க இருக்கும் இறுதிச் சுற்றில் ஜப்பான் அணியும் இந்திய அணியும்  மோத உள்ளன.

ஆசிய விளையாட்டில் இதற்கு முன்பு 1986 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி மீண்டும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

You may have missed