ஆசிய விளையாட்டு 2018 : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்

ஜாகர்தா

சிய விளையாட்டுப் போட்டியின் மும்முறை தாவும் போட்டியில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018 ஜாகர்த்தா நகரில் நடைபெற்று வருகிறது.   இன்று அந்த போட்டிகளில் மும்முறை தாவும் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது.    இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் அர்பிந்தர் சிங் கலந்துக் கொண்டார்.

இதில் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் தூரம்  தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.   இந்தியா கடந்த 48 வருடங்களுக்குப் பிறகு இந்த போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளது.  இதற்கு முன்பு கடந்த 1970ஆம் வருடம் மோகிந்தர் சிங் தங்கம் வென்றுள்ளார்.