ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: வங்கதேசம் -இலங்கை அணிகளுக்கு இடையே மோதல்

துபாய்:

சிய கோப்பை கிரிக்கெட்2018  போட்டிகள் வரும் இன்று தொடங்குகிறது.  துபாய் மற்றும் அபுதாபி போன்ற நாடுகளில் ஆசியகோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் போட்டியில் விளையாடுகின்றன.. இதில் ஏ- பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது.

கேப்டன் விராத் கோலிக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு ஆல்ரவுண்டர் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் இந்தியஅணி கோப்பையை கைப்பற்றுமா என கிரிக்கெட் ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.சி.சி. உலகக் கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் வங்தேசம்- இலங்கை அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்றுகள்: 

செப்டம்பர் 15 : வங்கதேசம் – இலங்கை (துபாய்)
செப்டம்பர் 16 : பாகிஸ்தான் – தகுதிச்சுற்று தேர்வாளர் (துபாய்)
செப்டம்பர் 17 : இலங்கை ஆப்கானிஸ்தான் (அபு தாபி)
செப்டம்பர் 18 : இந்தியா – தகுதிச்சுற்று தேர்வாளர் (துபாய்)
செப்டம்பர் 19 : இந்தியா – பாகிஸ்தான் (துபாய்)
செப்டம்பர் 20 : வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் (அபு தாபி)

சூப்பர் ஃபோர் சுற்று: 

செப்டம்பர் 21 : குரூப் ஏ வெற்றியாளர் – குரூப் பி இரண்டாவது இடம் (துபாய்)
செப்டம்பர் 21 : குரூப் பி வெற்றியாளர் – குரூப் ஏ இரண்டாவது இடம் (அபு தாபி)
செப்டம்பர் 23 : குரூப் ஏ வெற்றியாளர் – குரூப் ஏ இரண்டாவது இடம் (துபாய்)
செப்டம்பர் 23: குரூப் பி வெற்றியாளர் – குரூப் பி வெற்றியாளர் (அபு தாபி)
செப்டம்பர் 25: குரூப் ஏ வெற்றியாளர் – குரூப் பி வெற்றியாளர் (துபாய்)
செப்டம்பர் 26: குரூப் ஏ இரண்டாவது இடம் – குரூப் பி இரண்டாவது இடம் (அபு தாபி)

இறுதி ஆட்டம்:

செப்டம்பர் 28 : ஃபைனல் (துபாய்)

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Asian Cup cricket tournament starts today: Bangladesh between Sri Lanka match today, ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: வங்கதேசம் -இலங்கை அணிகளுக்கு இடையே மோதல்
-=-