சிங்கப்பூர்,
சிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பெற்றதற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
4–வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. நேற்று  இறுதி போட்டி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, சீனாவை வீழ்த்தி சாதனை படைத்து.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள்  ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சீனா–இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 13–வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது.
பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தீப் கிரேஸ் எக்கா இந்த கோலை அடித்தார்.
44–வது நிமிடத்தில் சீன அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீராங்கனை ஷோங் மெங்லிங் அபாரமாக இந்த கோலை அடித்து அசத்தினார்.
கடைசி (60–வது) நிமிடத்தில் இந்திய அணி 2–வது கோலை அடித்து சீனாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோலை நோக்கி அடித்த பந்து தடுத்து திரும்பியதை தீபிகா தாக்குர் துரிதமாக செயல்பட்டு கோலாக மாற்றினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
‘இது இந்திய ஹாக்கிக்கு மிகச் சிறந்த தருணம்’ என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.