ஆசிய விளையாட்டுப் போட்டி: ஆண்கள் இணை பிரிட்ஜ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஜகர்தா:

ந்தோனேசியாவில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்து உள்ளத.

ஏற்கனவே குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ள நிலையில், தற்போது ஆண்கள் இணை பிரிட்ஜ் (சீட்) போட்டியிலும் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.‘

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று 14வது நாளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 22 வயதேயான  இந்திய வீரர் அமித் பங்கல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.

இந்த நிலையில், ஆண்கள் இணை பிரிட்ஜ் போட்டியில் இந்திய வீரர்களான பிரனாப் பர்தான், சிபிநாத் சர்க்கார் இணை வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளது.

 

You may have missed