ஆசிய போட்டியில் 6-வது தங்கம்: டென்னிசில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி வெற்றி

ஜகார்தா:

சிய விளையாட்டுப் போட்டியின் 6வது நாளான இன்று இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இன்று நடைபெற்ற படகு ஓட்டுதல் போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு தக்கப்பதக்கத்தை தட்டிச்சென்றுள்ளது.

இரட்டையர் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தேர்வானதும், பதக்கம் உறுதி என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற  இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக்-யேவ்சயவ் ஜோடியை அசால்டாக எதிர்கொண்டது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே விட்டுக்கொடுக்காமல் விளையாடி வந்த இந்திய வீரர்கள்,  இறுதியில் 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை தட்டிவந்தனர.

இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதுதவிர 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது.