ஆசிய போட்டி: பெண்கள் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றுது. சீனாவை சேர்ந்த பெண்கள் அணி, இந்தியாவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது.

squash

18வது ஆசிய போட்டி இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய பெண்கள் அணி, சீனாவின் ஹாங்காங் அணி வீராங்கனைகளை எதிர்த்து விளையாடினர். ஆரம்பம் முதலே விட்டுக்கொடுகாமல் விளையாடி வந்த சீன வீராங்கனைகள் இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

இதையடுத்து ஸ்குவாஷ் பிரிவில் இந்திய பெண்கள் அணிக்கு வெளிப்பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியின் போது ஜோஷ்னா சின்னப்பா கிடைத்த வாய்ப்பை நழுவ விடவே இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்திய அணி சார்பில் விளையாடிய அனக்கா அலங்காமனி, ஜோஷ்னா சின்னப்பா, அபரஜிதா பாலமுருகன், தீபிகா பல்லிகால் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.