ஆசிய விளையாட்டு: சீட்டு விளையாட்டில் இந்தியாவிற்கு 15வது தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவு சீட்டு விளையாட்டில் இந்தியாவிற்கு 15வது தங்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் 60 வயதான பிரணாப் பர்தன் மற்றும் சர்கார் சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

asiad-gold

இந்தோனேஷியாவில் நடந்து வரும் 18–வது ஆசிய விளையாட்டு போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான இரட்டை பிரிவு சீட்டுக்கட்டு விளையாட்டில் இந்தியாவை சேர்ந்த 60 வயதான பிரணாப் பர்தன் மற்றும் ஷிப்நாத் சர்கார்(56) சீனாவை சேர்ந்த லிசிங் யாங் மற்றும் காங் சென் – ஐ எதிர்கொண்டனர்.

இந்திய ஜோடி சிறப்பாக செயல்பட்டு, சீட்டு விளையாட்டின் இறுதி சுற்றில் 384 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. சீன ஜோடி 378 புள்ளிகள் பெற்ற நிலையில் வெள்ளிப்பதக்கமும், இந்தோனேசியா 374 புள்ளிகளை பிடித்து வெண்கலமும் வென்றது.

60 வயதில் சீட்டுக்கட்டில் விளையாடி பிரணாப் மற்றும் சர்கார் இந்தியாவிற்கு தங்கம் பெற்றுத்தந்து பெருமை தேடித்தந்துள்ளனர். இந்த போட்டியின் முடிவில் இந்தியா 15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 8-வது இடத்தில் நீடிக்கிறது.

இதே போல் இன்று நடைபெற்ற 49 கிலோ எடை கொண்ட குத்து சந்தை போட்டியில் அமித் பன்ஹால், உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார்.