ஆசியப் போட்டி: பாய்மர படகு போட்டியில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று அசத்தல்

ஆசிய விளையாட்டின் படகு போட்டியில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது. ஆடவர் பிரிவில் நடைபெற்ற பாய்மர படகு போட்டியில் இரு வெண்கலப்பதக்கமு, பெண்களுக்கான படகு போட்டியில் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கமும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

sailing

18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகர்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான பாய்மர படகு போட்டியில் வர்ஷா கௌதம் மற்றும் ஸ்வேதா ஷெர்வேகர் வெள்ளிப்பதக்கமும், ஹர்ஷிதா தோமர் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர்.

வர்ஷா மற்றும் ஸ்வேதா 15 சுற்றுகளில் 40 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடமும், ஹர்ஷிதா 12 சுற்றுகளுக்கு 62 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். சிங்கப்பூரை சேர்ந்த மின் கிம்பெர்லி லிம் மற்றும் ரூய் குய் செசிலியா 44 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்தனர். இதையடுத்து, சிங்கப்பூர் வீராங்கனைகள் தங்கப்பதக்கத்தையும், இந்திய வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.

இதே போன்று ஆண்களுக்கான படகு போட்டியில் வருண் அஷோக் தாக்கர் மற்றும் கணபதி செங்கப்பா ஜோடி 15 சுற்றுகளில் 53 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றனர்.

இதையடுத்து ஆசியப் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 13 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலப் பதக்கங்களை வென்று அதே 8வது இடத்தில் உள்ளது.