ஆசியப்போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

ஜகர்தா:

18 வது ஆசியப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில்  நேற்றுமுதல் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியவீரர்  தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஏற்கனவே நேற்று நடைபெற்ற போட்டிகளில்,  65 கிலோ மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்.

அதைத்தொடர்ந்து கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதலில் ஆபூர்வி-ரவிகுமார் ஜோடி வெண்கலம் வென்றனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள்  ஆடவர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இது இந்தியாவின் 3 வது பதக்கம் ஆகும். முதலிடத்தை சீனாவின் யாங் ஹவுரான் தங்கம் மற்றும் மூன்றாமிடத்தில் சீன தைபே வீரர் லு ஷாசூவான் வெண்கலம் வென்றார்.