ஆசிய விளையாட்டுப் போட்டி: பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்கள்
நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 69 பதக்கங்களை பெற்ற நிலையில், அதிக பதக்கம் வென்ற மாநிலங்களில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியா வென்ற 69 பதக்கங்களில் தமிழகத்தை சேர்ந்த வீரரகள் 15 பதக்கங்களை வென்று தந்துள்ளனர்.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகர்த்தா மற்றும் பாம்பெம்பங் நகரங்களில் நடைபெற்று முடிந்தது. கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி இம்மாதம் 2ம் தேதி இந்த போட்டிகள் முடிந்தன. இதில் இந்தியா, சீனா, பாக்கிஸ்தா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 571 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
என்றுமே இல்லாத அளவில் இந்த ஆசிய போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 15 பதக்கங்களை வென்றுள்ளனர். அதிக பதக்கங்களைப் பெற்றுத்தந்த மாநிலங்களின் வரிசையில் 3வது இடத்திலும், அதிக விளையாட்டுகளில் பதக்கம் வென்ற வகையில் 2வது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது.
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்:
1. பி.ஆர். ஸ்ரீஜேஷ் – ஆடவர் ஹாக்கி அணி போட்டியில் வெண்கலம்
2. ஆரோக்யா ராஜீவ் – கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும், ஆடவர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம்
3. தருண் அய்யாசாமி – ஆடவர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும், ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம்
4. தீபிகா பல்லிகல் – மகளிர் ஒற்றையர் ஸ்குவாஸ் போட்டியில் வெண்கலம் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி
5. ஜோஷ்னா சின்னப்பா – மகளிர் ஒற்றையர் ஸ்குவாஸ் போட்டியில் வெண்கலம்
6. சுனன்யா குருவில்லா – பெண்கள் அணிகளுக்கான ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி
7. சௌரவ் கோஷல் – ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் மற்றும் ஆடவர் அணிகளுக்கான ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம்
8. ஹரிந்தர் பால் சிங் சாந்து – ஆடவர் அணிகளுக்கான ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம்
9. வருண் தக்கார் – பாய்மரப் படகுப் போட்டியில் (49er) வெண்கலம்
10. கே.சி.கணபதி – பாய்மரப் படகுப் போட்டியில் (49er) வெண்கலம்
11. பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் – டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் வெண்கலம்
12. சரத் கமல் – டேபிள் டென்னிஸ் ஆடவர் அணிக்கான போட்டியிலும் கலப்பு இரட்டையர் போட்டியிலும் வெண்கலம்
13. சத்தியன் – டேபிள் டென்னிஸ் ஆடவர் அணிக்கான போட்டியில் வெண்கலம்
14. அமல்ராஜ் – டேபிள் டென்னிஸ் ஆடவர் அணிகளுக்கான போட்டியில் வெண்கலம்
15. ரூபிந்தர் பால் சிங் – ஹாக்கி ஆடவர் அணி போட்டியில் வெண்கலம்