Random image

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவில் இருந்து 53பேர் பங்கேற்பு

இந்தோனேசியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 53 தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை மட்டுமே அனுப்ப இந்தியா முடிவெடுத்துள்ளது. இவர்களில் ஈட்டி எறியும் போட்டியின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா, வட்டு எறிதலில் சாம்பியனான சீமா அந்தில் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். நீரஜ் மற்றும் சீமா குவாஹத்தியில் உள்ள தேசிய இன்டர்ஸ்டேட் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டனர். எனினும் இருவரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் ஆசிய போட்டியில் பங்கேற்பது குறித்து உறுதிப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது.
asian
தேசிய தடகள சாம்பியன்ஷிப் சங்கம் ஆசிய போட்டியில் பங்கேற்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்யும் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளது. ”50 தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அவர்கள் சரியான வழிகாட்டுதலின் பேரில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்கள்” என்று இந்திய தடகள சம்மேளத்தின் தலைவரான அதிலே சுமாரிவாலா கூறியுள்ளார்.

இந்தியா சார்பில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 102 பேர் அனுப்பப்பட்டால் அவர்களில் பாதிப்பேர் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வாங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை மட்டுமே நாங்கள் அனுப்புகிறோம் என்று இந்திய தடகள விளையாட்டு குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்களை காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் வீரர்கள் அனுப்பப்படுவதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை செயலாளரான ராஜீவ் மேக்தா கூறியுள்ளார். இது கடந்த ஆண்டை காட்டிலும் 500க்கும் குறைவாக இருக்கின்றன. 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 541 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.