ஆசிய போட்டியில் பங்கேற்க சென்ற வீரர்களுக்கு ஓராண்டு விளையாட தடை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற ஜப்பான் நாட்டு வீரர்கள் நான்கு பேருக்கு தலா ஒரு ஆண்டு விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. போட்டி விதிமுறைகளை மீறியதன் காரணமாக கூடைப்பந்து வீரர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

download

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகாத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, பாக்கிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 11ஆயிரம் வீரர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்தியா சார்பில் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஆசிய போட்டியில் பங்கேற்க இந்தோனேசியாவிற்கு சென்றிருந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த கூடைப்பந்து வீரர்கள் 4 பேருக்கு ஒரு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. ஹசி மோட்டா, கெய்டா இமாமுரா, நகாயோஷி மற்றும் தகுமோ சாட்டோ விளையாட சென்றிருந்த நிலையில் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் உல்லாசமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நான்கு பேரும் ஜகார்த்தாவில் உள்ள பிரபல பார் ஒன்றில் மது அருந்தியதுடன், 4 பெண்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஜப்பான் நாட்டு கூடைப்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு அவர்கள் நான்கு பேருக்கும் போட்டிகளில் பங்கேற்க தலா ஒரு ஆண்டு தடை விதித்தது. மேலும், அவர்களின் 3 மாத ஊதிய தொகையில் 10% குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.