ஆசிய போட்டி: ரிலே ஓட்டத்தில் இந்திய ஆண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்

ஆசிய விளையாட்டு போட்டியின் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் (ரிலே) இந்தியாவின் ஆண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் 3 நிமிடங்கள் 01:85 நொடிகளில் இலக்கை அடைந்து இரண்டாம் இடம் பிடித்தனர்.

india-won-silver-in-relay

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா மற்றும் பாம்பெம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆண்களுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டம் (ரிலே) நடைபெற்றது. இதில் இந்தியாவின் எம்டி குன்ஹூ, தருண் அய்யாசாமி, முகமது அனாஸ் யஹியா மற்றும் ஆரோக்கிய ராஜிவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு இலக்கை 3 நிமிடங்கள் 01.85 நொடிகளில் கடந்து இரண்டாம் இடம் பிடித்தனர். இதன் மூலம் இந்திய வீரர்கள் வெள்ளிப்பதக்கத்தை தட்டி சென்றனர்.

இதைத் தொடர்ந்து பெண்களுக்கான 4×400 மீட்டர் ஓட்ட இறுதிப் போட்டி நடைப்பெற்றது. இதில் ஹீமா தாஸ், பூவம்மா உள்ளிட்டோர் பங்கேற்ற பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.