ஆசிய விளையாட்டு: மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

ஜகர்த்தா:

இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இன்று மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின.

1982ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றது இல்லை. இந்நிலையில் ஜப்பானும், இந்தியாவும் சிறப்பான தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியன.

எனினும் 2&1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 13 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.