ஆசிய விளையாட்டு….இந்திய தடகள வீரர்கள் தொடர்ந்து முன்னேற்றம்

ஜகர்த்தா:

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடந்து வருகிறது. இந்தியா இது வரை 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 29 பதக்கங்களை பெற்றுள்ளது..

இந்நிலையில் தடகள போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தின் அறை இறுதிப் போட்டிக்கு துபே சந்த் தகுதி பெற்றுள்ளார். தடகள வீரர்கள் முகமது அனாஸ் மற்றும் ராஜீவ் அரோகா ஆகியோர் 400 மீட்டர் ஒட்டத்தின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதேபோல் இந்திய தடகள வீராங்கணை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஒட்டத்தை 51 நொடிகளில் முடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து இந்திய தடகள வீராங்கணை நிர்மலா ஷியோரன் 400 மீட்டர் ஓட்டத்தை 54 நொடிகளில் முடித்து அறை மகளிர் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.