ஆசிய விளையாட்டு: தங்கம வென்ற குஜராத் வீராங்கணை செலவுக்கு பணமின்றி தவிக்கும் அவலம்

காந்திநகர்:

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கணை செலவுக்கு பணமின்றி அவதிப்படும் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் டாங் நகர் கர்டாயம்பா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி ரேனு. இவர்களின் மகள் சரிதா. ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சரிதா இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் 4*400 மீ தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

தங்கம் வென்று சாதனை படைத்த சரிதா இந்தோனேசியாவில் செலவுக்கு பணம் இன்றி தவித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் இந்தோனேஷியா சென்றது முதல் தர்ஷன் என்பவர் இதுவரை 45 ஆயிரம் ரூபாயை அவருக்கு அனுப்பியுள்ளார். தற்போது அவர் செலவுக்கு பணமின்றி தவித்து வருகிறார்.

2016, 2017-ம் ஆண்டுகளில் ஒரு வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ள சரிதாவுக்கு குஜராத் அரசு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவித்தது. ஆனால் இந்த தொகை அவருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது தங்கம் வென்றதற்காக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளார்.