ஆசிய விளையாட்டு: ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஜகர்த்தா:

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.

இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று வெண்கல பதக்கத்திற்கான ஹாக்கி ஆண்கள் போட்டி நடந்தது.இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின..

போட்டியின் 3வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் முதல் கோல் அடித்தார். 50வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஹர்மன்  பிரீத் சிங் கோல் அடித்தார். இதன் மூலம் இந்தியா 2 கோல்களுடன் முன்னிலை பெற்றது. 52வது நிமிடத்தில் பாகிஸ்தானின் முகமது ஆதிக் ஒரு கோல் அடித்தார், இறுதியில் 2:1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் வென்றது.