துப்பாக்கி சுடுதல் போட்டி: டபுள் டிராப் போட்டியில் 15வயது இந்திய வீரர் ஷார்துல் விகானுக்கு வெள்ளி

ந்தோனேசியாவின் ஜகர்தாவில்  18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைந்து வருகிறது. இன்று 5வது நாளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஆண்கள்  டபுள் டிராப் போட்டியில் இந்தியாவின்  ஷார்துல் விகான் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இவரின் தற்போதைய வயது 15.

ஏற்கனவே நேற்று நடைபெற்ற  25எம் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை  ராஹி சர்னோபட், முதல்பரிசான தங்கம் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும்  ஆசிய விளையாட்டு  போட்டியில்   இந்தியா, சீனா, கொரியா, இலங்கை, பாக்கிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்