ஆசிய விளையாட்டு: தமிழக வீரர் லட்சுமணன் வென்ற பதக்கம் செல்லாது….குழு அறிவிப்பு

ஜகார்த்தா:

ஆசிய விளையாட்டு போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் வெண்கலம் வென்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பதக்கம் செல்லாது என்று பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆண்கள் 10.000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் லட்சுமணன் வெண்கலப் பதக்கம் வென்றதாக செய்தி வெளியானது. ஆனால் லட்சுமணன் பாதையில் வெள்ளைக்கோட்டை தாண்டியதால் அவரது பதக்கம் செல்லாது என விளையாட்டு குழுவினர் அறிவித்தனர். இது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.