ஆசியப் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை பதிவு செய்தது இந்தியா – மல்யுத்தத்தில் பஜ்ராங் புனியா தங்கம் வென்று சாதனை

ஆசிய விளையாட்டு போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியாவை சேர்ந்த பஜ்ராங் புனியா தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய போட்டியின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்து பஜ்ராங் அசத்தியுள்ளார்.

pjimage

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருக்கிறது. செப்டம்பர் 2ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் 65 கிலோ எடை கொண்ட ஆண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவை சேர்ந்த பஜ்ராங் புனியா ஜப்பான் நாட்டை சேர்ந்த டகாதானி டாய்சியை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய புனியா 10-8 என வெற்றிப்பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்த ஆசிய போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை இந்தியாவுக்கு பஜ்ரங் புனியா பெற்று தந்துள்ளார். தங்கம் வென்ற வீரருக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.