ஆசிய மல்யுத்த போட்டி: பாக்கிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா முடிவு

ஆசிய மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கும் பாக்கிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் ஜூலை 17 முதல் 23ம் தேதி வரை ஆசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற உள்ளது. அண்டை நாடுகளில் இருந்து போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள் போட்டி நடைபெறும் இடங்களை தவிர வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக போட்டியில் பங்கேற்கும் பாக்கிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவதில் இந்தியா காலம் தாழ்த்தியது.
Asian-wrestling
பாக்கிஸ்தானிற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு பொறுப்பு ஏற்ற நிலையில் உள்துறை அமைச்சகம் இந்தியாவிற்கு பாக்கிஸ்தான் வீரர்கள் வருவதற்கு அனுமதி வழங்கியது. பாக்கிஸ்தான் வீரர்களிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்றப்பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மல்யுத்தத்தில் பங்கேற்பவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹோட்டல்கள், போட்டி நடைபெறும் இடங்களை தவிர வேறு எங்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் துணை செயலாளர் கூறுகையில் “ கிரைம் கிளைகளுக்கு இது குறித்து உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சகத்திடம் இருந்து வாக்குமூலத்தை பெற்றப்பின்பு தான் பாக்கிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான விசா நடைமுறையில் உள்ளது” என்று கூறினார்.

சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் வியாழக்கிழமைக்குள் முடிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்கும் நாடுகளில் பாக்கிஸ்தானிற்கு மட்டுமே பாதுகாப்பு நலன் கருதி விசா வழங்குவதில் காலத்தாமதம் ஏற்பட்டது.