ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018: பாட்மிண்டனில் பி.வி.சிந்துக்கு வெள்ளி

ஜகர்தா:

ந்தோனேசியால் நடைபெற்று  ஆசிய விளையாட்டு போட்டி 2018ன் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதி போட்டியில் தோல்வியுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றார்.

நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியின் அரை இறுதிப்போட்டியில்  ஜப்பான் நாட்டு வீராங்கனை அகனே யமகுச்சியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்த நிலையில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது.  இந்த போட்டியில், உலகின் நம்பர்1 வீராங்கனையான  டாய் டிசு யிங்-ஐ எதிர்கொண்டார்.  இந்த போட்டியில் 13-21, 16-21 என்ற செட் கணக்கில் டாய் டிசு யிங் சிந்துவை தோற்டகடித்தார்.

இதன் காரணமாக பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இது இந்தியாவின் 44வது பதக்கமாகும்.