ஆசியாவிலேயே அதிக வயது: கின்னஸ் சாதனை படைத்த ‘கஜராஜா’ யானை மரணம்!

திருவனந்தபுரம்:

சியாவிலேயே அதிக வயது வாழ்ந்து  கின்னஸ் சாதனை படைத்த ‘கஜராஜா’ யானை வயது முதிர்வு காரணமாக உடல்நலமின்றி  மரணம் அடைந்தது. இந்த யானைக்கு தற்போது வயது 88.  கஜராஜா யானை மரணமடைந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் பல கோவில்களில் யானைகள் வளர்க்கப்படுவது வழக்கம். அது போல கோவில்களில் சாமி ஊர்வலத்தில் பங்கேற்க அந்த கோவில்களுக்கு யானைகளை பலரும் காணிக்கையாக கொடுப்பது வழக்கம். பலர் வீடுகளிலும் அரசின் அனுமதி பெற்று யானைகள் வளர்த்து வரு கின்றனர்.

இந்த நிலையில் திருவிதாங்கூர் தேசம்போர்டுக்கு சொந்தமான யானையான தாட்சாயினி கடந்த 1950ம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட தாட்சாயினிக்கு திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனம் கோடு மனமேல்குன்று பகுதியில் உள்ள  யானை காப்பகதத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும், சிகிச்சை பலனின்றி தாட்சாயினி மரணம் அடைந்தது.

தாட்சாயினி என்ற அந்த யானைக்கு கடந்த 2016-ம் ஆண்டு  ‘கஜராஜா’ என பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் அதே ஆண்டு ஆசியாவிலேயே அதிக வயது உள்ள யானை என்ற சிறப்பையும் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்திலும் தாட்சாயினி யானை இடம்பெற்றது.

தாட்சாயினி இறந்த தகவல் கேட்டதும், திருவிதாங்கூர் ராஜகுடும்ப பிரதிநிதி உள்பட ஏராளமான பொதுமக்கள் நேரில் சென்று அஞ்சலி செலத்தினார்.

இந்த கஜராஜா எனப்படும்   தாட்சாயினி யானை பிரசித்திபெற்ற பத்மநாபபுரம் பத்மநாபசுவாமி கோவில் சாமி ஊர்வலம் உள்பட பல்வேறு கோவில்களில் நடந்த சுவாமி ஊர்வலங்களில் பங்கேற்ற பெருமை பெற்றது.