சசிகலாவுக்கு புதிய பதவி!

--

சென்னை:

திமுகழகத்தின் ஆட்சி மன்றக் குழு தலைவராக வி.கே. சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளரக நியமிக்கப்பட்டார்.  அவர் சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்ற பிறகு,   டிடிவி தினகரன், அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துவிட்டு சிறை சென்றார்.

இந்த நிலையில் மறைந்த ஜெயலலிதா போயிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12 ஆம் தேதியன்று இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது..

இந்நிலையில், அங்கு அதிமுக சார்பாக  யார் போட்டியிடுவார்கள் என்று டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ஆட்சி மன்றக் குழு அமைத்துமுடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி  அடுத்த  சில மணிநேரங்களிலேயே ஆட்சிக் குழு குறித்து அறிவித்துள்ளார்.

அதன்படி, ஆட்சிக்குழு தலைவராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆட்சிக் மன்றக் குழுவின் உறுப்பினர்களாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், டிடிவி தினகரன், அ.தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, டாக்டர் பி. வேணுகோபால், ஏ.ஜஸ்டின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தக் குழுதான் ஆர்.கே நகர் தொகுதி இடைத் தேர்தலிலில் அதிமுக சசி அணியின் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என்று தீர்மானிக்கும்.

சிறையில் இருந்தாலும் சசிகலாவுக்கு புதிய பதவி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.