வுரங்காபாத்

ர்ச்சைக்குரிய வங்காள தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவுரங்கபாதுக்குள் நுழைய இஸ்லாமிய போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

வங்காள தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய பல கருத்துக்கள் இஸ்லாமியரிடையே அதிருப்தியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக சிலர் கருதுகின்றனர்.   அவருக்கு பல நாடுகளிலும் விசா வழங்க மறுத்துள்ளனர்.  அவருடைய இந்திய விசா இந்த மாதம் 23ஆம் தேதி எக்ஸ்டண்ட் செய்யப்பட்டது.

தஸ்லிமா தனது விடுமுறையைக் கழிக்க அவுரங்காபாத் செல்ல திட்டமிட்டுள்ளார்.  இதற்காக அவர் தனது நண்பரின் பெயரில் அவுரங்காபாத் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் அறை பதிவு செய்துள்ளார்.   மேலும் அஜந்தா எல்லோரா போன்ற இடங்களுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார்.

அதற்காக தஸ்லிமா, நேற்று மாலை மும்பையிலிருந்து விமானம் மூலம் டில்லி வந்தார்.  அங்கு விமான நிலைய வாசலில் குழுமியிருந்த எதிர்ப்பாளர்கள் ”தஸ்லிமா, திரும்பிப் போ” என கூச்சலிட்டனர்.  அதே போல அவுரங்காபாத்தில் அவர் தங்க இருந்த ஓட்டலின் முன்பும் ரகளையில் ஈடுபட்டனர்.

அதனால் பாதுகாப்பு காரணம் கருதி தஸ்லிமாவை போலீசார் திரும்ப மும்பைக்கு அனுப்பி வைத்தனர்.  அவசரம் கருதி கடைசி நேரத்தில் அவருக்கு பயணச்சீட்டு அளிக்கப்பட்டு அடுத்த விமானத்தில் அவர் மும்பைக்கு திரும்பிச் சென்று விட்டார்.

இது குறித்து அவுரங்காபாத் மூத்த போலீச் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் “தஸ்லிமா தான் இங்கு வரப்போவது பற்றி முன் கூட்டியே தெரிவிக்கவில்லை.   நகரில் பல இடங்களில் மதச் சின்னங்களும், பிரார்த்தனை தலங்களுக்கும் தீவிரவாத தாக்குதலின் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இந்த பரபரப்பில் தஸ்லிமாவின் வருகையின் விளைவுகளையும் சமாளிக்க நாங்கள் தயாராக இல்லை.  அதனால் தான் திருப்பி அனுப்பி விட்டோம்” எனக் கூறினார்.

போராட்டக்காரர்களின் தலைவரும் எம் எல் ஏவுமான இம்தியாஸ் ஜலீல், ‘அவர் கருத்துக்களும், எழுத்துக்களும் இஸ்லாமியர்களின் மனதில் ஆறாத காயத்தை உண்டாக்கியுள்ளது.  அவர் மீண்டும் அவுரங்காபாத் வர எப்போது திட்டமிட்டாலும் அதை நாங்கள் எதிர்ப்போம்” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.