திஸ்பூர்: மக்கள் ஊரடங்கு என்று பிரதமர் மோடி அறிவித்த சில மணி நேரங்களில் அசாமில் பாஜக எம்எல்ஏ ஒருவர் வணிக வளாகத்தை திறந்து வைத்துள்ளது, சர்ச்சையாகி உள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள வரும் 22ம் தேதி மக்கள் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி நாளை மக்கள் ஊரடங்கு நடத்தப்படுகிறது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில் அசாமில் பிஸ்வாநாத் தொகுதி பாஜக எம்எல்ஏ பிரமோத் போர்த்தாகர் என்பவர், வணிகவளாகம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். இந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அவரின்  இந்த செயல், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பேசிய உள்ளூர்வாசி ஒருவர், பிரதமர் மோடி மக்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்து, பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவர் அழைப்பு விடுத்த  சில மணிநேரங்களுக்கு பிறகு, பாஜக எம்எல்ஏ ஷாப்பிங் மாலைத் திறந்து வைத்தார் என்று கூறினார்.