கட்சியிலிருந்து விலகினார் அஸ்ஸாம் மாநில பாரதீய ஜனதா எம்.பி.

குவஹாத்தி: திஸ்பூர் தொகுதியின் தற்போதைய பாரதீய ஜனதா உறுப்பினர் ராம் பிரசாத் வர்மா, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

திஸ்பூர் தொகுதியின் நடப்பு உறுப்பினராக இருக்கும் அவருக்கு, இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சூழல் உள்ளது.

டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட உத்தேச பட்டியலில், திஸ்பூர் தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில், அவரின் பெயர் இடம்பெறவில்லை.

அந்த இடத்தில், அஸ்ஸாம் மாநில நிதித்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மாவின் பெயரே இடம்பெற்றுள்ளது. இதனையடுத்தே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

“கட்சியில் புதிதாக நுழைந்தவர்களால், பல்லாண்டுகள் கட்சிக்காக உழைத்த பழைய நபர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார் அவர்.

– மதுரை மாயாண்டி