கவுகாத்தி:
பாஜக அளித்த உறுதி மொழிகளை எப்போது நிறைவேற்ற முடியாது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.


அசாமில் வரும் மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது, இந்த தேர்தல் முடிவுகள் வரும் மே மாதம் 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலாம் கவுகாத்தியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக அளித்த உறுதி மொழிகளை எப்போது நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அசாமில் கடந்த ஐந்து ஆண்டுகளில் உறுதியான ஒரு முதலமைச்சருக்கு பதிலாக இரண்டு முதலமைச்சர்கள் ஆட்சி செய்தனர். உங்கள் மாநில முதல்வர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பார் என்றும், அவர் உறுதியான் முதல்வராக இருப்பார் என்றும் உங்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், உங்கள் முதலமைச்சர் டெல்லி சொல்லும் படியே ஆட்சி செய்தார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த பாஜக தேர்தல் அறிக்கையில், ஐந்து லட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இன்றுவரை அதை நிறைவேற்றவே இல்லை. அசாம் மாநில மொழி, கலச்சாரம் மற்றும் வரலாற்றுக்கு பாஜக அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எதிர்வரும் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம். எங்கள் கூட்டணி, அசாமில் ஆட்சி அமைக்கும் என்றார்.