அஸ்ஸாம் விளையாட்டு தூதராக ஹிமா தாஸ் நியமிக்கப்படுவார்….முதல்வர் சர்பனந்த சோனோவால்

கவுகாத்தி:

20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் வென்றார். அஸ்ஸாம் முதல்வர் சர்பனந்தா சோனோவால், ஹிமா தாஸின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது முதல்வர் கூறுகையில்,‘‘ ஹிமா தாஸின் வெற்றியின் மூலம் பெண்களின் திறன் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹிமா தாஸுக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மாநில விளையாட்டுத் துறை தூதராக ஹிமா தாஸ் நியமிக்கப்படுவார்’’ என்றார்.