அசாமில் பயங்கரம்: இளஞ்ஜோடியை திருமணம் செய்ய வலியுறுத்தி கொடூர தாக்குதல்

கவுகாத்தி:

சாமில் இளம் ஜோடி ஒன்று கொடூரமாக தாக்கப்பட்டது. அவர்களை திருமணம் செய்துகொள்ள கூறி ஒரு கும்பல் அடித்து துன்புறுத்தியது.. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள  ரங்க்குலியில் ஒரு ஜோடியினர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை கண்ட அந்த பகுதி இளைஞர்கள், அவர்களை பிடித்து இழுத்து வந்து விசாரிது, அவர்கள் இருவரையும் திருமணம் செய்ய வலியுறுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்.  அவர்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் தூக்கி வீசப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. அதில், திருமணமாகாத ஒரு ஜோடியை  ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஒருவர் கையில் கம்புடன் அந்த இளம்பெண்ணை தாக்கி விசாரிக்கும் காட்சி பதிவாகி உள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, அசாம் மாநில காவல்துறை   டிஜிபி குலாதர் சைகியா தெரிவித்துள்ளதாவது,

கடந்த 19ந்தேதி இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகவும், ரங்குல்ஜி மாவட்டத்தில் உள்ள கோல்பாரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது., ஆனால், இதுகுறித்து தங்களுக்கு எந்தவிதமான புகாரும் வரவில்லை என்றாலும்,  இந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரை தேடி வருவதாகவும் கூறி உள்ளார்.

இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் திருமணமாகாதவர் என்றும், அவருடன் சென்ற 22 வயதான இளம்பெண் விவாகரத்து பெற்றவர் என்பதும், அவர்கள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில்  தெரிய வந்துள்ளதாகவும் கூறினார்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது ஐபிசி செக்ஷன் 342, 325 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.