‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்துக்கு அசாம் மாநில அரசு ரூ.50 லட்சம் பரிசு

 கவுகாத்தி:

ஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் படத்துக்கு அசாம் அரசு ரூ.50 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்து உள்ளது.

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த விருதை வெல்வது தங்களின் கனவு என  திரையுலகை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பொதுவாக வெளிநாட்டை சேர்ந்த படங்களே இந்த விருதுகளுக்கு தேர்வாகி வரும் நிலையில், தற்போது அசாம் மொழி படம் ஒன்று ஆஸ்கார் விருதுக்கான தேர்வு குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமா பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வரும்  ஆஸ்கர் அகாடெமி விருதுகள்  1929 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு  வருகிறது.  91-வது அகாடமி விருதுகள் 2019ம் ஆண்டு வழங்கப்பட உள்ளன. இதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

2019ம் ஆண்டு  நடைபெற உள்ள ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், சிறந்த வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் அசாமிய திரைப்படம் `வில்லேஜ் ராக்ஸ்டார்’ என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்துக்கு அசாம் மாநில அரசு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.  அசாம் அமைச்சரவையில் தீர்மானம் போடப்பட்டு, வில்லேஜ் ராக்ஸ்டார் படத்துக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், படத்தின் இயக்குனருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

ரீமா தாஸ் இயக்கிய இத்திரைப்படம் ஏற்கனவே இந்தாண்டுக்கான தேசிய விருதினை  பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி