2019ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு அசாம் மொழி படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ பரிந்துரை

2019 ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் அசாமிய மொழிப்படமான “Village Rockstars” என்ற இந்திய திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த விருதை வெல்வது எந்தவொரு படைப்பாளிக்கும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது.

ஆஸ்கர் அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் இந்த விருது நிகழ்ச்சி 1929 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.  91-வது அகாடெமி விருதுகள் 2019ம் ஆண்டு வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுக்கு இந்திய திரைப்படம் ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  அசாமிய இயக்குனர் ரிமாதாஸ் என்பவர் எழுதி, தயாரித்து, இயக்கிய திரைப்படமான வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ் (Village Rockstars) என்ற படம் தேர்வு குழுவினரின் பார்வைக்கு செல்கிறது.