வுகாத்தி

சாம் வெள்ளத்தினால் ஏற்பட்ட மரணம் 60 ஆக உயர்ந்தது.  சுமார் 10 லட்சம் வீடுகள் இன்னும் தண்ணிருக்குள் மூழ்கி உள்ளன

நேற்று அசாம் மாநிலம், மாரிகாவ் மாவட்டத்தில் ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து வெள்ளத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆனது.  சுமார் 10 லட்சம் வீடுகள் இன்னும் நீருக்குள் முழுகியபடி உள்ளன.  சுமார் 22000 மக்கள் வெள்ள மீட்பு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மாரிகாவ் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே  மூன்று மாதங்களுக்கு முன் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது.  அது சனிக்கிழமை அன்று உடைந்ததால், சுற்று வட்டமுள்ள கிராமங்களுக்குல் வெள்ளம் புகுந்தது.  அதன் காரணமாக ஒருவர் மரணம் அடைந்தார்.  பல வீடுகள் மூழ்கின.  வெள்ள அளவு இன்னும் அபாய நிலையிலேயே உள்ளதாக அரசு தெரிவிக்கிறது.

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் வெள்ளத்தால் அவதியுறுகின்றன.  காஜிரங்கா தேசியப் பூங்காவில் 38% அளவு நில பரப்பில் வெள்ளம் புகுந்துள்ளது.  பல விலங்குகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சுமார் 2 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டிருது பயிர்கள் முழுதும் நாசமாயின என அசாம் மாநிலத்தின் தேசிய பேரிடர் கண்காணிப்புத் துறை கூறி உள்ளது