கவுகாத்தி: அசாமில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி பெருவெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 85 பேர் பலியாகி உள்ளனர்.
அசாமில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பருவமழையை பெய்து வருகிறது. அதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
30 மாவட்டங்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், கட்டிடங்கள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அசாமில் நேற்றுவரை வெள்ள பாதிப்புக்கு 59 பேர் பலியாகி உள்ளனர். 45 லட்சத்து 40 890 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை இப்போது 85 ஆக உயர்ந்துள்ளது.
430 சதுர கி.மீ. பரப்பளவுள்ள காசிரங்கா தேசியப் பூங்காவின் 95 சதவீதப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 51 விலங்குகள் உயிரிழந்தன. 100க்கும் அதிகமான விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன.காசிரங்கா பூங்காவின் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 37ல் போக்குவரத்து முடங்கியுள்ளது. பூங்காவை உள்ளடக்கிய பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு பகுதியில் 2,816 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக பணிகளில் அசாம் மாநில பேரிடம் மேலாண் கழகம் இறங்கி உள்ளது.