சோனித்பூர்:

சாம் மாநிலத்தில்  ஜூலை 1ந்தேதி   ‘ஹெல்மெட் இல்லை, எரிபொருள் இல்லை’ என்ற விதி அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக இந்த விதி சோனித்பூர் மாவட்டத்தில் வரும் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அகில இந்திய அளவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதுதான். இதன் காரணமாக அரசும், நீதிமன்றங்களும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. இருந்தாலும், ஏராளமானோர் ஹெல்மெட் போடுவதை தவிர்த்து வருகின்றனர்.

சாலை விபத்து காரணமாக கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் 11, 266 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 50 சதவிகித உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியதால் நிகழ்ந்ததாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரசும் போக்குவரத்துக் காவல்துறையும் ஹெல்மெட் அணிவது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில், வாகன ஓட்டிகளில் உயிரிழப்பை தவிர்க்கும் வகையில், அசாம்  மாநிலம் அரசு ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு முதல் ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஹெல்மெட் அணிவதன் அத்தியாவசிய தேவை குறித்து  தேஜ்பூரில் மாவட்ட சாலை பாதுகாப்புக் குழுவின் கூட்டம்  நடைபெற்றது. இதில்,. சோனித்பூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. , என்.எச்.ஐ.டி.சி.எல், பி.டபிள்யூ.டி (கிராமப்புற) அதிகாரிகள், பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து,  ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எதிரான சட்டத்தை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி  ஜூலை 1 முதல் மாவட்டம் முழுவதும் ‘ஹெல்மெட் இல்லை, எரிபொருள் இல்லை’ என்ற விதிமுறையை அமல்படுத்தும். துணை ஆணையர் DTO-விடம் உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் / எரிபொருள் பம்புகளுக்கும் ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என அறிவிக்கப் பட்டு உள்ளது.

பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனதில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்குமாறு அவர் NHIDCL மற்றும் PWD (NH) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.