அசாம்: விஷ சாராயத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்வு..!

அசாம் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

asam

அசாம் மாநிலம் கோலகாட் மாவட்டத்தில் உள்ள ஜோர்ஹட் பகுதியில் கூலி வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் நுற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டாக சேர்ந்து நாட்டுச் சாராயம் குடித்துள்ளது. அவர் குடித்த சாராயம் விலை குறைவாக ரூ. 10 மற்றும் 20க்கு விற்கப்பட்டுள்ளது. விலை குறைவாக விற்கப்பட்ட அந்த சாராயத்தில் மூலப்பொருட்களின் கலவையினால் ஏற்பட்ட விஷம் அனைவரையும் உயிரிழக்க செய்துள்ளது.

நேற்று சாரயம் குடிந்த ஒருசில மணி நேரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது. அதன்பின்னர் ஓவ்வொருவராக உயிரிழக்க இன்றைய நிலவரப்படி சுமார் 93 பேர் சாராயத்தின் விஷத்திற்கு பலியாகியுள்ளனர். சாராயம் அருந்தி ஆபத்தான நிலையில் இருக்கும் சிலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷ சாராயம் அருந்தி சுமார் 104 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டைடே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணையை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தலைமை செயலாளர், காவல்துறை தலைமை அதிகாரி உள்ளிட்டவர்கள் அசாம் மாநில முதல்வர் சோனோவால் உடன் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.