ஒரு ரூபாய்க்குச் சாப்பாடு..  அசத்தும் அசாம் ஓட்டல்காரர்…

ஒரு ரூபாய்க்குச் சாப்பாடு..  அசத்தும் அசாம் ஓட்டல்காரர்…

மாதிரி புகைப்படம்

1977 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, இந்தியாவில் உள்ள ஓட்டல்களில் ஒரு ரூபாய்க்குச் சாப்பாடு பரிமாறப்பட்டது.

‘ஜனதா சாப்பாடு’ என்று அதற்குப் பெயர்.

அந்த சரித்திரம் இப்போது திரும்புகிறது.

அசாம் மாநிலம் கோஜாய் மாவட்டத்தில் சங்கர்நகர் என்ற இடத்தில் ஓட்டல் நடத்தி வரும் தேபு சாகா என்பவர், ஒரு ரூபாய்க்குச் சாப்பாடு போடுகிறார்.

தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஓட்டல் உள்ளது.

’’கொரோனாவை எதிர்த்து நாடும், மக்களும் யுத்தம் புரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏதோ என்னால் முடிந்த சின்ன உதவி இது’’ என்கிறார், தேபு.

‘’ பருப்பு, அரிசி மற்றும் ,இரு வகையான கறிகளுடன் பரிமாறப்படும் இந்த சைவ சாப்பாட்டின் வழக்கமான விலை, 50 ரூபாய்.

லாரி டிரைவர்கள், டாக்டர்கள்,போலீசார் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் ஒரு அடையாளமாக ஒரு ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு இங்கே சாப்பாடு போடுகிறேன்’’ என்றும் சொல்கிறார், இந்த அசாம் காரர்.

– ஏழுமலை வெங்கடேசன்