அசாம் குடிமக்கள் பதிவேடு குளறுபடி: ஓய்வுபெற்ற ராணுவஅதிகாரி முகமது சனவுல்லா பெயரும் இல்லை

கவுகாத்தி:

சாம் மாநிலத்தில் இன்று தேசிய குடிமக்கள் பதிவேறு இறுதிப்பட்டியல் வெளியான நிலையில், தற்போதும், ஓய்வுபெற்ற ராணுவஅதிகாரி முகமது சனவுல்லா பெயர் இடம்பெறவில்லை.

ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாத நிலையில், அவர்கள் ஆவனங்கள் தாக்கல் செய்தும் தற்போதும், அவரது பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்தில் 1987ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றி யவர் முகமது சனவுல்லா. கார்கில் போரிலும் பங்கேற்று, குடியரசு தலைவர் பதக்கமும் பெற்றவர்.  கடந்த 2014-ம் ஆண்டு ராணுவத்தின் கவுரவ கேப்டனாக இருந்து  ஓய்வு பெற்றார்.‘

அதைத்தொடர்ந்து மாநில காவல்துறையின் எல்லை பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றினார். அவர் சட்டவிரோதமாக  அசாமில் குடியேறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்து. அதில், அவரை முகாமில் அடைக்க தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், உயர்நீதி மன்றம் அவரை விடுவித்தது.

இந்த நிலையில், தற்போது அசாமில் வெளியாகி உள்ள இறுதி பட்டியலில்,  முகமது சனவுல்லா வின் பெயர் இடம் பெறவில்லை. அவரது  மகள்கள் மற்றும் மகன் பெயரும் சேர்க்கப்படவில்லை. ஆனால், சனவுல்லாவின் மனைவி பெயர் இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பலரது குடும்பத்தில் ஒருவர் பெயர் இடம்பெற்றும், மற்றொருவர் பெயர் இடம் பெறாமலும் உள்ளது.  தேசிய குடிமக்கள் இறுதிப் பதிவேடு குளறுபடியாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..