கவுகாத்தி:

சாம் தேசிய குடிமக்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியான நிலையில்,  ஏராளமானோர் பெயர்கள் மீண்டும் விடுபட்டுள்ள நிலையில், முன்னாள் சிஆர்பிஎப் வீரர் மகளும், பிரபல பத்திரிகையாளரான பர்வினா பெயரும் இடம்பெறவில்லை.

இதையடுத்து டிவிட் பதிவிட்டுள்ள பர்வினா, எங்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களுக்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள  அசாம் தேசிய குடிமக்கள் இறுதிப் பட்டியலில்19 லட்சம் பேரின்  பெயர்கள் விடுபட்டுள்ளது. இதில் இரண்டு முறை எம்எல்ஏ ஆன முன்னாள் எம்எல்ஏ உள்பட  பல எம்எல் ஏக்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்பட ஏரளமானோர் பெயர்கள் விடுபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பிரபல பத்திரிகையான டைம்ஸ்நவ் பத்திரிகையில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் பர்வினா புர்கயாஸ்தா (Parvina Purkayastha) என்பவரின் பெயரும் விடுபட்டுள்ளது. இவரது தந்தை ஓய்வுபெற்ற முன்னாள் சிஆர்பிஎப் வீரர், அவரது தாயார் மேகாலாய மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  இப்படியிருக்கையில், இவர்களது பெயர் விடுபட்டுள்ள சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் பர்வினா, ஏற்கனவே வெளியான வரைவு பதிவில் பெயர் விடுபட்டவர்கள், இறுதிப் பட்டியல் மீது நம்பிக்கை வையுங்கள் என்று கோரப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள இறுதிப்பட்டியலிலும் குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் உள்ளது அம்பலமாகி உள்ளது. ஆனால், தீர்ப்பாயத்தை அணுகுங்கள் என்று மீண்டும் கூறுகிறார்கள். ஆனால், எங்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களுக்கு யார் பொறுப்பு என்று கேள்வி விடுத்துள்ளார்.

இன்று வெளியான பட்டியல் குறித்து  கூறிய என்ஆர்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜீலா , இறுதி பட்டி யலில் 3,11,21,004 பேர் இடம்பெற்றுள்ளனர். உரிய ஆவணங்கள் வழங்காத 19,06,657 பேர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

இந்த பட்டியலில் திருப்தி இல்லாதவர்கள், வெளிநாட்டினவருக்கான தீர்ப்பாயத்தில் முறையிட்டு நிவாரணம் பெறலாம் என்றும் கூறி உள்ளார்.