வுகாத்தி

குளிர்ந்த நீரைப் பீய்ச்சி அடித்து ஒருவரைக் கொன்ற அசாம் போலிசார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்  என உயர் அதிகாரி உறுதி அளித்துள்ளார்.

கர்னாடகா மாநிலத்தின் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் ஹாசன் அலி.   இவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அசாம் மாநிலம் மங்கள்தோய் மாவட்டத்தில் அட்டகடா என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார்.   இந்த கிராமம் இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ளது.

சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பிய ஹாசன் அலியிடம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி இரவு போலிசார் விசாரணை செய்துள்ளனர்.    ஹாசன்  சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறி அவருடைய வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர்.   ஆனால் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.   அதன் பின் அவர் ஆயுதத்தை மறைத்து வைத்திருப்பதாகக் கூறி அவரை அடித்து உதைத்துள்ளனர்.

ஹாசனின் மனைவி ஜமிரான் நெசா போலீசாரிடம் கணவரை விட்டு விடுமாறு கெஞ்சி உள்ளார்.    அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத போலிசார். ஹாசன் முகத்தை ஒரு துணியால் கட்டி குளிர்ந்த நீரை அவர் முகத்தில் பீச்சி அடித்துள்ளனர்.    மூச்சுத் திணறிய ஹாசன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.    மயக்கமடைந்த் ஹாசனை காவல்துறையினர் மங்கள்தோய் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.   அங்கு அவர் இறந்த நிலையில் எடுத்து வரப்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

அடுத்த நாள் காலை இந்தச் செய்தி பரவி அந்த கிராமத்தினர் காவல்துறையின் இந்த் அராஜகத்தை எதிரித்து போராட்டம் நடத்தத் துவங்கினர்.  கிட்டத்தட்ட 5000 பேர் கொண்ட அந்தக் கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் மரணம் அடைந்தார்.   இதையொட்டி மாநிலம் முழுவதும் காவல்துறைக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதையொட்டி நேற்று சம்பவம் நடந்த இடத்துக்கு அசாம் மாநில காவல்துறை இயக்குனர் முகேஷ் சகாய் வருகை தந்தார்.  அப்போது அவர், “நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.  இதற்கு சம்பந்தமானவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது.   குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள்” என உறுதி அளித்தார்.   மேலும் மரணமடைந்த ஹாசனின் குடும்பத்துக்கு ஆறுதல் அளித்ததுடன் அவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான வசதிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார்.