அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியில் ‘போடோலேண்ட் மக்கள் முன்னணி’ என்ற பிராந்திய கட்சி அங்கம் வகிக்கிறது.

அண்மைக்காலமாக பா.ஜ.க.வுக்கும், போடோலேண்ட் கட்சிக்கும் இடையே பல பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பா.ஜ.,க. கூட்டணியில் இருந்து வெளியேறி, காங்கிரஸ் கூட்டணியில் சேர அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

ஹக்ரமா மொஹிலாரி

“அசாம் மாநிலத்தில் அமைதி – வளர்ச்சி – ஒற்றுமை ஆகிய மூன்றும் அவசியம் என கருதுகிறோம். எனவே காங்கிரஸ் கூட்டணியில் இணைய முடிவு செய்தோம்” என போடோலேண்ட் மக்கள் முன்னணி தலைவர் ஹக்ரமா மொஹிலாரி தெரிவித்தார்.

அசாம் மாநிலத்தில் மூன்று கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட ஆறு கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் மெஹா கூட்டணியை உருவாக்கி உள்ளது.

போடோலேண்ட், காங்கிரஸ் கூட்டணியில் சேரும் ஏழாவது கட்சியாகும்.

– பா. பாரதி