அசாம்: ரூ.4,40,000 அளவிலான புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

கவுகாத்தி,

சாசம் மாநிலத்தில்  ரூ.4,40,000 மதிப்பிலான, புதிய 2000 ரூபாய் போலி ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  பணமதிப்பிழப்பை மத்திய அறிவித்தபிறகு, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அதிக பாதுகாப்பு வசதியுடன் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்தது.

ஆனால், ஒரிஜினல் நோட்டுக்களை போலவே கள்ளநோட்டுக்களும் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டு வருகிறது.

ஏற்கவே பாகிஸ்தான் எல்லை, வங்காள எல்ல மற்றும் குஜராத், கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் மற்றும் டில்லியில் கள்ளநோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒருசில இடங்களில் ஏடிஎம் இயந்திரத்திலும் கள்ளநோட்டுக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

துப்ரி (Dhubri) மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பெட்டியை கண்டு பிடித்தனர். அதை சோதனை செய்து பார்த்தபோது, அதனுள்  புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அந்த பணம்  துப்ரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போலி 2000 நோட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது.

மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.