அசாம் தத்தளிப்பு:  வெள்ளத்தால் 12 லட்சம் பேர் பாதிப்பு

 கவுகாத்தி:

சாமில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மழை வெள்ளத்தால் அசாம் மாநிலமே தத்தளித்துக்கொண்டு உள்ளது. மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி செல்கிறார்கள்.

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 15 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

அந்த மாவட்டங்களில் உள்ள சுமார் 12 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அசாம் மாநில வெள்ள பாதுகாப்பு படையினருடன் ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 80 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக அசாம் மாநில அரசு தெரிவித்து உள்ளது. மேலும் மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

 

கார்ட்டூன் கேலரி