அசாம் : குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக மோடிக்கு மாணவர்கள் தொடர்ந்து கருப்புக் கொடி

கவுகாத்தி

அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கும் மாணவர்கள் மோடிக்கு தொடர்ந்து கருப்புக் கொடி காட்டி வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து அசாமில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. அசாம் மக்கள் பலர் தங்களுக்கு அளித்த விருதுகளை மத்திய அரசுக்கு திருப்பி அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முதல் அம்மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள பிரதமர் மோடி அசாம் மாநிலம் சென்றுள்ளார்.

 

அவர் நேற்று மாலை கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை செல்லும் போது வழியில் அசாம் யுவா சத்ரா பரிஷத் அமைப்பினர் அவருக்கு கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அதற்கு சில நிமிடங்கள் கழித்து மற்றொரு மாணவர் பிரிவினர் ஜாலக் பாரியில் அமைந்துள்ள கவுகாத்தி பல்கலைக் கழகத்தில் கருப்புக் கொடி காட்டினார்கள். இந்த இரு பிரிவு மாண்வர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் உசான் கடைவீதியில் உள்ள மகாத்மா காந்தி சாலை வழியே பிரதமர் மோடி தலைமைச் செயலகம் சென்றார். அங்கும் ஒரு மானவர் குழு வழியில் நின்று கருப்புக் கொடி காட்டி குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இந்த மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.