அசாம் : உல்பா தீவிரவாதிகள் தாக்குதல்! 2 பேர் பலி!!

 

தின்சுகியா:

சாம் தின்சுகியா மாவட்டத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

அசாம் உல்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பேர்  குழுவினர்  அசாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பாபான் கிராமத்தில் திடீரென  தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை நோக்கி சரமாரையாக  சுட்டனர். நேற்று இரவு 7.30 மணி அளவில் இந்த தாக்குதல் நடைபெற்றது.  இதையறிந்த பாதுகாப்பு படை போலீசார் எதிர் தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.  இதையடுத்து அந்த பகுதிக்கு துணைராணுவப்படை மற்றும் போலீஸ் படையினர் விரைந்து உள்ளனர்.

தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தொடர்ந்து  நடைபெறுவதாக  கிழக்கு பகுதி ராணுவ  கமாண்டர் தெரிவித்து உள்ளார்.   அப்பகுதியில் பதுங்கி  உள்ள தீவிரவாதிகள் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தால் அசாமில் பதற்றம் அதிகரித்துள்ளது.  பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டு உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி