130 ஆண்டுகளாக பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்யும் கிராமம்!

--

ந்த தீபாவளிக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு பசுமை பட்டாசுகளையே வெடிக்க வேண்டும், உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

பசுமைப்பட்டாசுகள் என்பதற்கான வரையறை என்ன என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கேள்வி எழுப்பி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.

ஆனால் அசாம் மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தில் கடந்த 130 ஆண்டுகளாக பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இம்மாநிலத்தில் உள்ள கனாக்குச்சி கிராமத்தில் வசிக்கும் மக்கள் 1885 ஆம் வருடத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி இந்த பட்டாசுகளை தயாரித்து வருகிறார்கள். இந்த பட்டாசு உற்பத்தியில் வேதிப்பொருட்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறார்கள்.  குறைவான சத்தத்தமே எழுப்பும் இந்த பட்டாசுகள், சிறப்பாக ஒளிர்கின்றன. காதுக்கும்  ஆபத்தில்லை.. அதே நேரம் கண்களை பரவசமாக்குகிறது.

இதுகுறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த கோப்ஜித் என்பவர் தெரிவிக்கையில், “என் முன்னோர்கள் இந்த பசுமை பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டார்கள். இன்று நாங்கள் தொடர்கிறோம். எங்களுடைய பட்டாசுகளில் அதிகப்படியான வெடி மருந்துகள் சேர்க்கப்படாது. அதிக மாசு ஏற்படுத்தாது.  நம்நாட்டில் இருக்கும் பிரச்சனை என்வென்றால் எது பசுமை வெடிகள் என்று கண்டறி முறையான சட்டதிட்டங்கள் இல்லை.

இதனால் எது பசுமை வெடி என்று மக்களால் அறிந்து கொள்ள முடிவதில்லை. இதற்கு ஒரு முடிவு வந்தால் எங்களைப் போன்ற உள்நாட்டு பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும்” என்றார்.

அரசு நடவடிக்கை எடுக்குமா?