அஸ்ஸாம் எம்எல்ஏ மீது பெண் பாலியல் புகார்…..போலீஸ் விசாரணை

கவுகாத்தி:

கணவர் உதவியுடன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அஸ்ஸாம் எம்.எல்.ஏ. ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநில ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்.எல்.ஏ. நிஜாம்உத்தின் சவுத்ரி. இவர் மீது ஒரு பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில்,‘‘எனது கணவர் துணையுடன் எம்.எல்.ஏ. தன்னை கடந்த மாதம் 2 முறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

என்னை கவுகாத்திக்கு கடத்திச் செல்ல எம்.எல்.ஏ. முயன்றார். நான் தற்கொலைக்கு முயன்றதால் அந்த முயற்சியை அவர் கைவிட்டார்’’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டை எம்.எல்.ஏ. நிஜாம்உத்தின் சவுத்ரி மறுத்துள்ளார்.

சமீபத்தில் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் உத்தரபிரதேச எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அடுத்து ஒரு எம்எல்ஏ பாலியல் புகாரில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.